இதயம் பாடல் வரிகள்

Movie Name
Kochadaiyaan (2014) (கோச்சடையான்)
Music
A. R. Rahman
Year
2014
Singers
Vairamuthu
Lyrics
Vairamuthu
தளபதி ரஜினி சிறையில். காதலிக்கும் இளவரசி அந்தப்புரத்தில் சங்க இலக்கிய மொழியில் காதல் பிரிவைப் பாடும் பாடல்

தீபிகா படுகோன் :
செந்தீ விழுந்த செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய் …
இதயம்
நகர்ந்து நகர்ந்து
நகர்ந்து போகுதே
நல்ல மரத்தின் நறுங்கிளை யிழிந்து
வெள்ளச் சுழியில் விழுந்த மலராய்…
இதயம்
கரைகள் மறந்து
திசைகள் தொலைந்து போகுதே
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு
என் உயிரோ சிறிதே
காதலோ பெரிதே
*
ரஜினி :
பூப்பது மறந்தன கொடிகள்
புன்னகை மறந்தது மின்னல்
காய்ப்பது மறந்தது காடு
காவியம் மறந்தது ஏடு
யானோ நின்னை மறக்கிலேன்
மறக்கிலேன்
*
ரஜினி :
செந்தமிழ் பிரியும் சங்கம்
செங்கடல் பிரியும் அலைகள்
ஒலியைப் பிரியும் காற்று
உளியைப் பிரியும் சிற்பம்
யானோ நின்னைப் பிரிகிலேன்
பிரிகிலேன்
வாய் மொட்டுடைந்தால் பூவாசம்
வாசத்துக்கேது சிறைவாசம்?

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.