ஓஹோ மாயா பாடல் வரிகள்

Movie Name
Iru Mugan (2016) (இரு முகன்)
Music
Harris Jayaraj
Year
2016
Singers
Ramya NSK
Lyrics
Thamarai
ஹையோ நெஞ்சிலே ஆடும் ஊஞ்சலே     
இந்நாள் வானிலை அடடா டாடடா…     
ஆஹா வானிலே பாதை ஏறுதே     
பனியாய் மாறுதே அடடா டாடடா…     

கண்ணும் கண்ணுமே பேசும் நேரமே     
வார்த்தை என்பதே இனிமேல் பாரமே     
ஒட்டிக்கொள்ளவே வா என் பக்கமே     
பக்கம் என்பதும் இங்கே தூரமே     

ஏழேழு பிறவிகள் உனை தொடர்ந்து வந்தேன்     
ஏனடி என் தேடலை அறியாமல் போனாய்     
வான் மீது எனை உனக்கென மினுக்கியவன்     
ஏனடி என் மின்மினியை பார்க்காமல் போனாய்     

ஓ… மாயா மேகம் நீயா…     
ஓஹோ மாயா மேகம் தீயா…     
கண்ணே காதலி காதல் மார்வலி     
காயம் ஆவதா கண்ணை தாழ்த்து நீ     
முத்தம் நீயடி சத்தம் நானடி     
நாணம் வந்ததால் அது ஒன்றானதே     
உன்னை எண்ணியே நாட்கள் போனதே     
ஊகம் செய்வதே உவகை ஆனதே     
காலம் கூடுதே கைகள் சேருதே     
கைகள் சேர்வதே கனவாய் தோன்றுதே     
உன்னாலே பல இரவுகள் உறக்கமில்லை     
பாதியிலே கண் விழித்து உன்னை தேடி பார்த்தேன்     
இன்றோடு என் தனிமைகள் முடிந்துவிடும்     
நான் விழித்தால் நீ இருப்பாய்     
உன்ன அள்ளி சேர்ப்பேன்     
ஓ மாயா மேகம் நீயா ஓ மாயா மோகம் தீயா     
     
வானின் நீளமே கடலின் ஆழமே     
காற்றின் சீழமே காதல் ஆகுமே     
நானும் நீயுமே வாழும் வாழ்விலே     
காலம் தாண்டியும் காதல் நீளுமே     
நானும் மாறினேன் நீதான் காரணம்     
கேட்பேன் என் வரம் விரலில் மோதிரம்     
என்னை உன்னிடம் தந்தேன் சீதனம்     
ஆடும் என் மனம் அடையும் ஆனந்தம்     
உன் வீட்டில் இனி எனக்கொரு     
அறை இருக்கும் நான் இருக்கும்     
நாள் வரைக்கும் அட நீயும் இருப்பாய்     
உன் தோளில் மலர் கொடி ஒன்று     
படர்ந்திருக்கும் நீ தெளிக்கும் நீர் இனிக்கும் தந்து அடைப்பாய்     
ஓ மாயா மேகம் நீயா     
ஓ மாயா மேகம் தீயா… 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.