இன்று நேற்று நாளை பாடல் வரிகள்

Movie Name
Indru Netru Naalai (2015) (இன்று நேற்று நாளை)
Music
Hiphop Tamizha
Year
2015
Singers
Aalap Raju, Shankar Mahadevan
Lyrics
Muthamil
இன்று நேற்று நாளை யாவும்
கொண்டு போகும் காதலே

உன்னை சேர வேண்டித்தான்
மண்ணில் எங்கும் வாழ்கிறேன்

வானவில் என் வாழ்க்கையில்
தோன்றும் முன்பு மறைந்து போன

தேன் துளி பூக்களில்
தேடும் தேனீ நான் என

காதலே என் காதலே
எங்கு போகிறாய் என் வாழ்வில் வாழும் முன்
வீழ்கிறேன்
தேவதை உனை தேடினேன்

உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது
காலம் கடந்து போன பின்பு மண்ணில் வாழ்வது

காலம் எந்தன் கைபிடிக்குள் மாட்டிகொண்டது
காதல் என்னை விட்டுவிட்டு எங்கு சென்றது

கடவுள் வந்து பூமி மீது வாழும்போதிலும்
காதல் தோல்வி ஆகும்போது சாக தோன்றிடும்

காதல் இன்றி பூமி மீது வாழ நேர்ந்திடும்
கொஞ்ச நேரம் கூட நரகம் போல மாறிடும்

இன்று நேற்று நாளை யாவும்
கொண்டு போகும் காதலே

உன்னை சேர வேண்டித்தான்
மண்ணில் எங்கும் வாழ்கிறேன்

இன்று நேற்று நாளை யாவும்
கொண்டு போகும் காதலே

உன்னை சேர வேண்டித்தான்
மண்ணில் எங்கும் வாழ்கிறேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.