உயிரிலே எனது உயிரிலே பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Vettaiyaadu Vilaiyaadu (2006) (வேட்டையாடு விளையாடு)
Music
Harris Jayaraj
Year
2006
Singers
Mahalakshmi Iyer, Srinivas
Lyrics
Thamarai
உயிரிலே எனது
உயிரிலே ஒரு துளி தீயை
உதறினாய் உணர்விலே
எனது உணர்விலே அனுவென
உடைந்து சிதறினாய்

ஏன் என்னை மறுத்து
போகிறாய் கானல் நீரோடு
சேர்கிறாய் கொடுத்ததாய்
சொன்ன இதயத்தை திருப்பி
நான் வாங்க மாட்டேனே

உயிரிலே எனது
உயிரிலே ஒரு துளி தீயை
உதறினாய் உணர்விலே
எனது உணர்விலே அனுவென
உடைந்து சிதறினாய்

அருகினில் உள்ள
தூரமே அலை கடல் தீண்டும்
வானமே நேசிக்க நெஞ்சம்
ரெண்டு போதாதா போதாதா
நீ சொல்லு நேசமும் ரெண்டாம்
முறை வாராதா கூடாதா நீ
சொல்லு

இது நடந்திட
கூடுமோ இரு துருவங்கள்
சேருமா உச்சரித்து நீயும்
விலக தத்தளித்து நானும்
மருக என்ன செய்வேனோ

உயிரிலே எனது
உயிரிலே ஒரு துளி தீயை
உதறினாய்
உணர்விலே
எனது உணர்விலே
அனுவென உடைந்து
சிதறினாய்

ஏதோ ஒன்று
என்னை தடுக்குதே
பெண் தானே நீ என்று
முறைக்குதே என்னுள்ளே
காயங்கள் ஆறாமல் தீராமல்
நின்றேனே விசிறியாய் உன்
கைகள் வந்தாலும் வாங்காமல்
சென்றேனே

வா வந்து என்னை
சேர்ந்திடு என் தோள்களில்
தேய்ந்திடு சொல்ல வந்தேன்
சொல்லி முடித்தேன் வரும்
திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்

ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

ஏன் என்னை மறுத்து
போகிறாய் கானல் நீரோடு
சேர்கிறாய் கொடுத்ததாய்
சொன்ன இதயத்தை திருப்பி
நான் வாங்க மாட்டேனே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.