வெண்மதி வெண்மதியே பாடல் வரிகள்

Movie Name
Minnale (2001) (மின்னலே)
Music
Harris Jayaraj
Year
2001
Singers
Tippu
Lyrics
Thamarai
வெண்மதி வெண்மதியே நில்லு – நீ
வானுக்கா மேகத்துக்கா சொல்லு

வெண்மதி வெண்மதியே நில்லு – நீ
வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் – உன்னை
இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே – உன்னாலே
நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்…

ஜன்னலில் வழி வந்து விழந்தது
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே ஆ..ஹ ஹா ஹா
தீப்பொறி என இரு விழிகளும்
தீக்குச்சி என எனை உரசிட
கோடிப்பூக்களாய் மலர்ந்தது மனமே
அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையே
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே ......

வெண்மதி வெண்மதியே நில்லு – நீ
வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் – உன்னை
இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே – உன்னாலே
நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்…

அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது
ஆசையின் மழை அதில் நனை ந்தது
நூறு ஜன்மங்கள் நினைவினில் இருக்கும்
அது போல இந்த நாள் வரை உயிர் உருகிய
அந்த நாள் சுகம் அதை நினைக்கையில்
ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்
ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரியவில்லை
விவரம் ஏதும் அவள் அறியவில்லை
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே...

உன்னை
இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே – உன்னாலே
நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்…

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.