விழியே விழியே பாடல் வரிகள்

Last Updated: Jan 29, 2023

Movie Name
Idhu Kathirvelan Kadhal (2013) (இது கதிர்வேலன் காதல்)
Music
Harris Jayaraj
Year
2013
Singers
Thamarai
Lyrics
Thamarai
விழியே விழியே திரை விரிகிறதே
உனைப் பார்த்திடும் வேளையிலே
அதிலே அதிலே படம் வரைகிறதே
மனம் சேர்ந்திடும் ஆசைகளே

கதிரவனாக பிரிந்த பகல்
நிலவென தேயவும் துணிந்ததடி
கருநிறமாக இருந்த நிழல்
உனதொரு பார்வையில் வெளுத்ததடி

அன்பே உனைப் பார்ப்பதும் அனுபவமே
உன்னால் உயிர் போவதும் சுகம் சுகமே (2)

விழியே விழியே ....

சரணம் - 1

எதை நீ சொன்னாலும் வியப்பேன்
உன் அழகைக் கை ஏந்தி ரசிப்பேன் (2)

அடம் நீ செய்தாலும் பொறுப்பேன்
உன் குரலை செல் போனில் பதிப்பேன்
பொழுதும் உன்னோடு இருப்பேன்
உன் சிரிப்பில் சோம்பல்கள் முறிப்பேன்

எதை நீ சொன்னாலும் வியப்பேன்
உன் அழகைக் கை ஏந்தி ரசிப்பேன்

சரணம் - 2

இலையும் தீண்டாத கனி நீ
நான் சுவைக்கும் நாள் கேட்கும் பொறு நீ
விரல்கள் மீட்டாத இசை நீ
மெல்லிசையாய் என் காதல் வசம் நீ
தவமே செய்யாத வரம் நீ
பெண் கடலே முத்தங்கள் இடு நீ

இலையும் தீண்டாத கனி நீ
நான் சுவைக்கும் நாள் கேட்கும் பொறு நீ

விழியே விழியே ....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.