உன் தலைமுடி பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Kadhalil Vizhunthen (2008) (காதலில் விழுந்தேன்)
Music
Vijay Antony
Year
2008
Singers
Karthik, Thamarai
Lyrics
Thamarai
பெண்: உன் தலைமுடி உதிர்வதைக்கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினைக்கூட ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
உன்னை வானத்தில் தேடியே
மேகம் கண்ணீரை சிந்துதோ
உன்னை நான் கண்டு சேரவே
பூமி என்னோடு சுற்றுதோ... (உன் தலைமுடி...)

(இசை...)

ஆண்: உச்சந்தலை மீது நீ கொடுக்கும் முத்தம்
உயிரின் மீது பட்டுத் தெறிக்கும்
கைகள் பற்றிக்கொண்டு பேசிக்கொள்ளும் நேரம் இனி
க்கும்
எதிர் வரும் காற்று உன் பெயரை என்னில்
தினமும் கிறுக்கிவிட்டுப் போகும்
நெற்றிப் பொட்டுக்குள்ளே கொட்டிவிட்டேன் என்னை முழுதும்

பெண்: உன் கண்ணில் பட்ட பூவை கூந்தலுக்குள் வைப்பேன்
காலில் பட்ட கல்லை மூக்குத்தியில் வைப்பேன்
கையில் பட்ட என்னை உன் இதயப் பையில் வைப்பேன்
என்னைக் கொடுப்பேன்.... (உன் தலைமுடி...)

(இசை...)

பெண்: நீயும் என்னை தினம் தேட வேண்டும் என்று
தொலைந்துப் போக கொஞ்சம் ஆசை
நான் அணைத்து தூங்கும் மீசை வைத்த பொம்மை நீயே....
மேய்ச்சல் நிலமாக விழுந்து கிடக்கிறேன்
மேய்ந்துக் கொள் என்னை முழுதும்
தொட்டில் இன்றித் தூங்கும் என் மார்பில் உந்தன் முத்தம் தினமும்....

ஆண்: உன்னைப் பற்றி ஏறும் காதல் கொடி நானே
உன் கையெழுத்தைத் தாங்கும் காகிதமும் நானே
உன் உள்ளங்கையில் சுற்றும் பம்பரமும் நானே
எந்தன் உயிரே... ஓஹோ... (உன் தலைமுடி...)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.