வான மழைப்போலே பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Idhu Namma Bhoomi (1992) (இது நம்ம பூமி)
Music
Ilaiyaraaja
Year
1992
Singers
K. J. Yesudas
Lyrics
Vaali
வான மழைப்போலே புது பாடல்கள்
கான மழைத் தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடு நாள் வாழும் இது
வான மழைப்போலே புது பாடல்கள்
கானமழைத் தூவும் முகில் ஆடல்கள்

***

இதயம் ராத்திரியில் இசையால் அமைதி பெறும்
இருக்கும் காயமெல்லாம் இசையால் ஆறிவிடும்
கொதிக்கும் பாலையிலும் இசையால் பூ மலரும்
இரும்பு பாறையிலும் இசையால் நீர் கசியும்
பழிவாங்கும் பகை நெஞ்சும் இசையால் சாந்தி பெறும்

வான மழைப்போலே புது பாடல்கள்
கான மழைத் தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடு நாள் வாழும் இது
வான மழைப்போலே புது பாடல்கள்
கானமழைத் தூவும் முகில் ஆடல்கள்

***

மா கா ம தா நி த... க ம ப த நி... தா நி த சா
ச நி நி த ப க ரி.... சா நி ப கா சா
குரலில் தேன் குழைத்து குயிலைப் படைத்தவர் யார்
மனத்தை மெல்லிசையால் இழுத்தே வைத்தவர் யார்
அறையில் பாட்டெடுப்பேன் அரங்கம் தேவை இல்லை
சபையில் பேரெடுக்க குயில்கள் இசைப்பதில்லை
எனக்கே நான் சுகம் சேர்க்க தினமும் பாடுகின்றேன்

வான மழைப்போலே புது பாடல்கள்
கானமழைத் தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடு நாள் வாழும் இது
வான மழைப்போலே புது பாடல்கள்
கானமழைத் தூவும் முகில் ஆடல்கள்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.