உச்சி வெயில் ரோட்டுல பாடல் வரிகள்

Movie Name
Haridas (2013) (ஹரிதாஸ்)
Music
Vijay Antony
Year
2013
Singers
D. Imman
Lyrics
Annamalai

நெறஞ்ச மனசு உனக்குத்தானடி மகமாயி...
உன்னே நெனச்சுப்புட்டா கெடுதலெல்லாம் சுகமாகி...
மறைகளும் இதை சொல்லுமடி மகமாயி
கண்ணில் தொட்டியங்குளம் தெரியுதடி மகமாயி...

உச்சி வெயில் ரோட்டுல நாங்க கருவாடா காயிறோம்
தொப்பிக்குள்ள வேர்வையில கொப்பரையா நனையிறோம்
இன்னா வாழ்க்க வாழுறோம் இன்னாத்துக்கு வாழுறோம்
போலீஸ்காரன் வாழ்க்கைக்குள்ள போனா
வண்டி வண்டியா கொட்டுதடா கானா

காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் கல்லெடுத்து அடிக்கிறான்
அட பஸ்ஸு வேனு ட்ரைனு வேனு ஊர்வலமா நடத்துறான்
மந்திரிங்க வராங்கன்னு காக்க வச்சு கொல்லுறான்
அட ரௌடி கூட எங்கள பாத்து மாமான்னு சொல்லுறான்

ஆளும் கட்சி ஆள அட்ஜஸ்ட் பண்ண போகணும்
எதிர் கட்சி ஆள உள்ள தூக்கி போட்டோணும்
எல்லாருக்கும் சங்கம் வச்சிருக்கான் இங்க
எங்களுக்கு மட்டும் ஊதுறாங்க சங்க........(உச்சி)

போலீஸ்காரன் தொப்பதான் உன்
கண்ணுக்கெல்லாம் தெரியுது
நாங்க படும் கஷ்டமெல்லாம் யாருக்குடா புரியுது
திருடன் கூட வாழுறானே சொகமாதான் ஜெயிலுல
இந்த போலீஸ்காரன் பொழப்பு மட்டும்
மண்ட காயுது வெளியில

டே அண்ட் நைட்டு ட்யூட்டி திட்டுறா பொண்டாட்டி
குடும்பம் புள்ளக்குட்டி முழிக்குதடா மாட்டி
போலீஸுன்னு சொன்னா பேரு ரொம்ப பெரிசு
மாசக் கடைசி ஆனா வித்தௌட்டு என் பர்ஸு..(உச்சி)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.