உலகினில் மிக உயரம் பாடல் வரிகள்

Last Updated: Feb 01, 2023

Movie Name
Naan (2012) (நான்)
Music
Vijay Antony
Year
2012
Singers
Annamalai, Vijay Antony
Lyrics
Annamalai
உலகினில் மிக உயரம், மனிதனின் சிறு இதயம்
நினைவுகள் பல சுமக்கும், நிஜத்தினில் எது நடக்கும்

விரல் நீட்டும் திசையில், ஓடாது நதிகள்
நதி போகும் திசையில் நீ ஓடு

உன்னை வாட்டி எடுக்கும், துன்பம் நூறு இருக்கும்
தடை நூறு கடந்து போராடு

உலகினில் மிக உயரம், மனிதனின் சிறு இதயம்

கடலினில் கலந்திடும் துளியே
கவலை எதுக்கு
அலையுடன் கலந்து நீ ஆடு
வாழ்கை உனக்கு

உறவுகள் இனி உனக்கெதுக்கு
உலகம் இருக்கு
வலிகளை தாங்கிடும் கல்லில்
சிலைகள் இருக்கு

அலைகள் அலைக்களிக்கும் ஓடம் தான்
கடலை தாண்டி வந்து கரையேறும்
ஊசி துளைக்கும் துணி மட்டும் தான்
உடுத்தும் ஆடை என்று உருவாகும்
இருளில் இருந்தே வெளிச்சம் பிறக்கும் எப்போதும்
(உலகினில் மிக உயரம்)

கனவுகள் சுமந்திடும் மனமே, உறக்கம் எதற்கு
இருக்குது உனக்கொரு பாதை, நடக்க தொடங்கு

தயக்கங்கள் இனி உனக்கெதுக்கு, துணிந்த பிறகு
நடப்பது நடக்கட்டும் வாழ்வில், கடக்க பழகு

இடிகள் இடிக்கும் அந்த வானம் தான்
உடைந்து விழுவதில்லை எப்போதும்
அடியை தாங்கி கொல்லும் நெஞ்சம் தான்
அடுத்த அடியை வைத்து முன்னேறும்

நினைப்பின் படியே எதுவும், நடக்கும் எப்போதும்

உலகினில் மிக உயரம், மனிதனின் சிறு இதயம்
நினைவுகள் பல சுமக்கும், நிஜத்தினில் எது நடக்கும்
(விரல் நீட்டும்)

உன்னை வாட்டி எடுக்கும், துன்பம் நூறு இருக்கும்
தடை நூறு கடந்து போராடு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.