வெள்ளக் குதிர மேல பாடல் வரிகள்

Last Updated: Mar 27, 2023

Movie Name
Haridas (2013) (ஹரிதாஸ்)
Music
Vijay Antony
Year
2013
Singers
Ramaniammal
Lyrics
Annamalai

வெள்ளக் குதிர மேல
வீச்சருவா கையில் ஏந்தி
அய்யனாரு வந்தாரய்யா
அகிலத்த ஆட்சி பண்ண

மன்னவனே உன் கையில
மரப்பாச்சி குதிர பொம்ம
நீ ஆட்சி செய்யும் காலம்
இன்னும் ரொம்ப தூரமில்ல...

நாலு காலு புரவியடா
எட்டு தெச பறக்குமடா
நாடாண்ட மன்னருங்க
நம்பி நின்ன சக்தியடா

குலம் வழி சத்தமிட்டு
புயல் வேகம் இது பறக்கும்
போர் களத்தில் சீறி பாஞ்சி
போராடி வெற்றி தரும்...

கடிவாளம் நீ புடிச்சா
கையில் வானம் அடங்குமடா
பிடிவாதம் நீ புடிச்சு
பூமியில ஜெயிக்கணும்டா.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.