எனக்கொரு கெர்ள் பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Boys (2003) (பாய்ஸ்)
Music
A. R. Rahman
Year
2003
Singers
Karthik, Tippu
Lyrics
Pa. Vijay
இன்றே இன்றே வேணும்

பால்போலே பதினாறில் 
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணும்
இன்று புதிதாக அவிழ்ந்த மலர் போல
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணும்

இணைய தளத்தில் கணிணி களத்தில்
மின் அஞ்சல் அரட்டைகள் அடிக்கணுமே
வியர்வை வழிந்தால் மழையில் நனைந்தால்
முகத்தை முகத்தால் துடைக்கணுமே

எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா

கெர்ள் ஃபிரண்ட் தானே பாய்ஸின் பூஸ்ட் அல்லவா
கெர்ள் ஃபிரண்ட் இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா
கெர்ள் ஃபிரண்ட் வேணும் வேணும்
(பால் போலே..)

ஃபிரண்ட்ஸோட கவிதைகள் வாங்கி
என்னோட கவிதைன்னு சொல்லி
இதயத்தில் இடமொன்று பிடிக்கத்தான்
ஓடதா சினிமாக்கு ஓடி
சரியான கார்னர் சீட் தேடி
பபுள் கம்மை இதழ் மாற்றி கொள்ளத்தான்
செல் போன் பில் ஏற
ஜோக்குகள் தினம் கடிக்க SMS அனுப்ப
தேவை கெர்ள் ஃபிரண்ட் தான்

காலார நடை போட
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணும்
காலம் தெரியாமல் கடலை நான் போட
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணும்
நிலவின் நகலாய் அறைக்குள் மழையாய்
எலுமிச்சை மணமாய் இருக்கணுமே
இன்னொரு நிழலாய் இரவல் உயிராய்
இருபது விரலாய் இருக்கணுமே

எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா

கெர்ள் ஃபிரண்ட் தானே பாய்ஸின் பூஸ்ட் அல்லவா
கெர்ள் ஃபிரண்ட் இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா
கெர்ள் ஃபிரண்ட் வேணும் வேணும்

பைக் ஏறி ஊர் சுற்ற செல்ல
ஆ ஊன்னா ட்ரீட் ஒன்று வைக்க
முணுக்குன்னா க்ரீட்டிங்ஸ் கார்ட் கொடுக்கத்தான்
ஹச்சென்றால் கர்சீப்பை நீட்ட
இச்சென்றால் இடக்கண்ணம் காட்ட
நச்சென்று தலை மீது கொட்டத்தான்...
பார்த்தால் பல்ப் எறிய பார்பி டால் போல
போனி டேயிலோடு தேவை கெர்ள் ஃபிரண்ட் தான்

கெ கெ கெர்ள் ஃபிரண்ட் தானே பாய்ஸின் பூஸ்ட் அல்லவா
கெர்ள் ஃபிரண்ட் இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா
கெர்ள் ஃபிரண்ட் வேணும் வேணும்

எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.