சகியே என் இளம் சகியே பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Dhaam Dhoom (2008) (தாம் தூம்)
Music
Harris Jayaraj
Year
2008
Singers
Bombay Jayashree, Krish
Lyrics
Pa. Vijay
வளியே என் உயிர் வளியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் நீ துரத்துறியே
மதியே என் முழு மதியே
வெண் பகல் இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசுறியே

யாரோ... மனதிலே... ஏனோ... கனவிலே...
நீயா... உயிரிலே... தீயா... தெரியலே...
காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ (வலியே என்...)மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் ஆனதே...
தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன் ...
நீயா...
முழுமையாய்

நானா...
வெறுமையாய்

நாமா... இனி சேர்வோமா... 

யாரோ... மனதிலே... ஏனோ... கனவிலே...
நீயா... உயிரிலே... தீயா... தெரியலே......மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்ததும் உன் கண்கள் தான்
மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது உன் வார்த்தை தான்....
கண்களைக் காணவே இமைகளே மறுப்பதா
வெந்நீர்...
பெண்ணிலா

கண்ணீர்...
கண்ணிலா...

நானும்... வெறும் கானலா...

யாரோ...
யாரோ...

மனதிலே... ஏனோ...
ஏனோ...
கனவிலே...

ஓ... நீயா...
ஓ... நீயா...

உயிரிலே.. தீயா..
தீயா...

தெரியலே...
காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ 

வளியே என் உயிர் வளியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் நீ துரத்துறியே
மதியே என் முழு மதியே
வெண் பகல் இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசுறியே...

வளியே என் உயிர் வளியே

சகியே என் இளம் சகியே

வலியே என் உயிர் வலியே.

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.