Song lyrics

Yennachu Yedhachu Lyrics

என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
G. V. Prakash Kumar
Year
2015
Singers
G. V. Prakash Kumar, Saindhavi
Lyricist
Kabilan
Yennachu Yedhachu

Video

Yennachu Yedhachu

Lyrics

Yennachu Yedhachu Lyrics

ஆண்:என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
காணாத கண்ணுக்குள்ள
காதல் இப்போ கண்காட்சி

பெண்: பூ ஆச்சி பொண்ணாச்சு
பூ நெஞ்சு புண்ணாச்சு
நீ தொட்ட நேரம் இப்போ நெருப்பா
ஆச்சு என் மூச்சு

ஆண் : ஊ நெனப்புல நான் வாட
என் உசுருல நீ தேட
மலை வெயிலென
பாக்க வேணாம்
மயங்கிட வாடி மனசோட

பெண்: நடு இரவில ஆள் இல்ல
துடி துடிக்கிறா வா மெல்ல
இது வரை நான் பாத்ததில்ல
இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல

ஆண்: கண்ணில் நீ வந்து கத பேச
கனவில் உன்னால் சிரிச்சேனே
உலகம் எல்லாமே தடுத்தாலும்
உனக்கு துணையாக இருப்பேனே

ஆண்: ஊ ஆசை நான்
என் ஆசை நீ
பேராசை ஆவோமா

பெண்:கண் மூடியே கை கோர்த்து தான்
காணமல் போவோமா

ஆண்: எல்லோரும் தூங்கும் போது
காதல் கண்ணில் தூக்கம் இல்ல

பெண்: பொல்லாத காதல் வந்தால்
அக்கம் பக்கம் பார்பதில்ல

ஆண் :அன்பே உன் கண்கள் ரெண்டும்
என் காதல் கண்ணாடி

பெண்:சூரியன் கண் பார்க்கும் முன்னே
நீ வாடா முன்னாடி

ஆண் :என்னோடு நீ உன்னோடு நான்
வேறென்ன சந்தேகம்

பெண்:கையோடு வா பின்னிக் கொள்ள
நீதாண்டா சந்தோசம்

ஆண்: நம்மோட யாரும் இல்ல வெக்கம் என்ன வெக்கம் என்ன

பெண்:என்னோடு நானே இல்ல என்ன பண்ண என்ன பண்ண

ஆண்:பாவாடா ராட்டினம் போலே நீ என்ன சுத்தாத

பெண்:உன் மீச முள்ளாலே ஏரோசாவே குத்தாத

ஆண்:என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
காணாத கண்ணுக்குள்ள
காதல் இப்போ கண்காட்சி

பெண்: பூ ஆச்சி பொண்ணாச்சு
பூ நெஞ்சு புண்ணாச்சு
நீ தொட்ட நேரம் இப்போ நெருப்பா
ஆச்சு என் மூச்சு

ஆண்:உன் நெனப்புல நான் வாட
என் உசுருல நீ தேட
மழை வெயிலென
பாக்க வேணாம்
மயங்கிட வாடி மனசோட

பெண்:நடு இரவில ஆள் இல்ல
துடி துடிக்கிறா வா மெல்ல
இது வரை நான் பாத்ததில்ல
இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல

ஆண்:கண்ணில் நீ வந்து கத பேச
கனவில் உன்னால் சிரிச்சேனே
உலகம் எல்லாமே தடுத்தாலும்
உனக்கு துணையாக இருப்பேனே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people