சிறகுகள் வந்தது எங்கோ செல்ல பாடல் வரிகள்

Last Updated: Mar 25, 2023

Movie Name
Sarvam (2009) (சர்வம்)
Music
Yugabharathi
Year
2009
Singers
Javed Ali, Madhushree
Lyrics
Pa. Vijay
சிறகுகள் வந்தது
எங்கோ செல்ல இரவுகள்
தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை
காணவே

கனவுகள் பொங்குது
எதிலே அள்ள வலிகளும்
சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னை
தேடியே

உன்னை உன்னை
தாண்டி செல்ல கொஞ்ச
காலம் கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம் கூட
என்னால் ஆகுமோ

உன்னை உன்னை
தேடி தானே இந்த ஏக்கம்
இந்த பாதை இந்த பயணம்
இந்த வாழ்க்கை ஆனதோ

கனவுகள் பொங்குது
எதிலே அள்ள வலிகளும்
சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது
உன்னை தேடியே

ஆஆ ஆஆ ஆஆ
ஆஆஹா ஆஆஹா
ஆஆஹா ஆஆஹா

ஓ நதியே நீ எங்கே
என்று கரைகள் தேட கூடாதா
நிலவே நீ எங்கே என்று
முகில்கள் தேட கூடாதா

ஓ மழை இரவினில்
குயிலின் கீதம் துடிப்பதை
யார் அறிவார் கடல் மடியினில்
கிடக்கும் பலரின் கனவுகள்
யார் அறிவார்

அழகே நீ எங்கிருக்கிறாய்
வலித்தால் அன்பே நீ அங்கிருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்

அன்பே எந்தன்
நெஞ்சம் எங்கே பூவின்
உள்ளே நிலவின் மேலே
தீயின் கீழே காற்றின்
வெளியே இல்லையே

உந்தன் கண்ணில்
உந்தன் மூச்சில் உந்தன்
இரவில் உந்தன் நெஞ்சில்
உந்தன் கையில் உந்தன்
உயிரில் உள்ளதே

சிறகுகள் வந்தது
எங்கோ செல்ல இரவுகள்
தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை
காணவே

ஒரு இமை எங்கிலும்
தேனில் மூழ்க ஒரு இமை
மாத்திரம் வலியில் நோக
இடையினில் எப்படி கனவும்
காணுமோ

உன்னை உன்னை
தாண்டி செல்ல கொஞ்ச
காலம் கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம் கூட
என்னால் ஆகுமோ

உன்னை உன்னை
தேடி தானே இந்த ஏக்கம்
இந்த பாதை இந்த பயணம்
இந்த வாழ்க்கை ஆனதோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.