முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே பாடல் வரிகள்

Movie Name
Sonnalthan Kaathala (2001) (சொன்னால்தான் காதலா)
Music
T. Rajendar
Year
2001
Singers
Silambarasan
Lyrics
T. Rajendar
ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா
முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே
சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே
(முள்ளாக..)

நீ விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி
உன்னை நினைத்துவிட்டேன்
தேளாய் கொட்டினாலும் சரி
திட்டினாலும் சரி என்னை கொடுத்திவிட்டேன்
(நீ விரும்பினாலும்..)
ரோஜா ஐ லவ் யூ..
(முள்ளாக..)

ஆளக்கால விஷம் உண்ட சிவனைக் கண்டேன்
அது போல காதல் விஷம் நானும் உண்டேன்
உண்டாலோ உடன் கொல்லும் சாதா விஷம்
மெல்ல மெல்ல ஆளைக் கொல்லும் அது காதல் விஷம்
காதல் விஷம் பெண்ணில் கண்டேன்
கண்ணால் அதை நானும் உண்டேன்
பெண்ணோட நெனப்புத்தான் நெறுப்பென்று
தெரிஞ்சு நான் விழுங்கி விட்டேன்
நெஞ்சத்தை எறித்தாலும் துப்பத்தான்
முடியாமல் தவிக்கின்றேன்

மறக்கத்தான் நீ சொன்னாய் முடியிலையடி
முயற்சி தான் செய்தும் மனம் கேட்களடி
பறிக்காதே என்னை என்று ஒரு பூ சொல்லுது
கேட்காமல் மனம்தான் பெண் பின் செல்லுது
முட்டாள் மனம் திருந்தாதடி
போனால் மனம் திரும்பாதடி
எறிகின்ற நெருப்பாலே
வெண்சங்கை சுட்டாலும் நிறம் மாறுமா
பெண்ணும் தான் வெறுப்பாளே
என் நெஞ்சை சுட்டாலும் மனம் தான் மாறுமா
ரோஜா ஐ லவ் யூ 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.