கிளையில்லாத மரங்களில் பாடல் வரிகள்

Movie Name
Kilinjalgal (1981) (கிளிஞ்சல்கள்)
Music
T. Rajendar
Year
1981
Singers
Jayachandran
Lyrics
T. Rajendar
கிளையில்லாத மரங்களில் நிழல் தேடும் மனங்களே
அழிவில்லா காதலில் அழிகின்ற மலர்களே
ஆ ஆ அழிகின்ற மலர்களே

காதல் ஒரு வழி பாதை பயணம் அதில் நுழைவது என்பது சுலபம்
பின்பு பிரிந்திட நினைப்பது பாவம்
பின்பு பிரிந்திட நினைப்பது பாவம்
அது ஆற்றிட முடியா காயம் காதல் ஆற்றிட முடியா காயம்
காதல் ஒரு வழி பாதை பயணம் அதில் நுழைவது என்பது சுலபம்

மேகங்கள் போட்டிடும் கோலம் அது காற்றினில் கலைந்திட சோகம்
மேகங்கள் போட்டிடும் கோலம் அது காற்றினில் கலைந்திட சோகம்
காலை கதிரவன் அழித்திடும் பனி போல்
காலை கதிரவன் அழித்திடும் பனி போல்
காதல் விதியவன் சிதைத்திடும் கனவோ
காதல் விதியவன் சிதைத்திடும் கனவோ
காதல் ஒரு வழி பாதை பயணம் அதில் நுழைவது என்பது சுலபம்

கோடையில் பாய்ந்திடும் நதிகள் எந்த நிலையிலும் காயாத விழிகள்
கோடையில் பாய்ந்திடும் நதிகள் எந்த நிலையிலும் காயாத விழிகள்
கதை சாகின்ற வரையிலும் தொடரும்
கதை சாகின்ற வரையிலும் தொடரும்
கட்டை வேகின்ற போதும் மலரும்
கட்டை வேகின்ற போதும் மலரும்
காதல் ஒரு வழி பாதை பயணம் அதில் நுழைவது என்பது சுலபம்
பின்பு பிரிந்திட நினைப்பது பாவம்
அது ஆற்றிட முடியா காயம் காதல் ஆற்றிட முடியா காயம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.