மேகம் தான் இதில் மழையே பாடல் வரிகள்

Last Updated: Feb 02, 2023

Movie Name
Nenjil Oru Raagam (1982) (நெஞ்சில் ஒரு ராகம்)
Music
Ilaiyaraaja
Year
1982
Singers
S. P. Balasubramaniam
Lyrics
T. Rajendar
மேகம் தான் இதில் மழையே இல்லை
ராகம் தான் இதில் இசையே இல்லை
பாய் மரம் ஒன்று நான் விரித்தேனம்மா
புயல் வரக்கண்டு அதில் தவித்தேனம்மா
திசை மாறவே தடுமாறினேன்
அலையதில் எழுதிடும் கவிதை என்பேன்
மேகம் தான் இதில் மழையே இல்லை
ராகம் தான் இதில் இசையே இல்லை

ஜோதியென்றேன் இருளைப் போக்கயில்லை
தோணியென்றேன் நதியைக் கடக்கயில்லை
நிலவென்றேன் மேகத்திலே மறைந்துகொண்டாளா
மலரென்றேன் இதழ்களை மூடிக்கொண்டாளா
கடலென்றேன் அலைகளையே நிறுத்திக்கொண்டாளாம்
கடலென்றேன் அலைகளையே நிறுத்திக்கொண்டாளாம்
காதலென்றேன் இதயமதே இல்லையென்றாளாம் ஹஹ
காதலென்றேன் இதயமதே இல்லையென்றாளாம்

மேகம் தான் இதில் மழையே இல்லை
ராகம் தான் இதில் இசையே இல்லை

பொன் மாலையென்றேன் தென்றல் வீசவில்லை
பூ மாலையிட யோகம் எனக்கு இல்லை
சொப்பனத்தில் நினைத்திருந்தேன் ராமனாக
சுயம்வரத்தில் என்னை நினைத்தால் ராவணன் போல
சீதையவள் வாழட்டுமே யுகம் யுகமாக
சீதையவள் வாழட்டுமே யுகம் யுகமாக
சிதை எரிந்த பின்னும் உருகிடுவேன் அவள் நினைவாக
சிதை எரிந்த பின்னும் உருகிடுவேன் அவள் நினைவாக

மேகம் தான் இதில் மழையே இல்லை
ராகம் தான் இதில் இசையே இல்லை
பாய் மரம் ஒன்று நான் விரித்தேனம்மா
புயல் வரக்கண்டு அதில் தவித்தேனம்மா
திசை மாறவே தடுமாறினேன்
அலையதில் எழுதிடும் கவிதை என்பேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.