விழிகள் மேடையாம் பாடல் வரிகள்

Movie Name
Kilinjalgal (1981) (கிளிஞ்சல்கள்)
Music
T. Rajendar
Year
1981
Singers
S. Janaki
Lyrics
T. Rajendar
பப்ப பப்ப பா பப்ப பப்ப பா

பப்ப பப்ப பா பப்ப பப்ப பா

லல லல லா..லல லல லா..

லல லல லா..லல லல லா..

விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்
ஓ..ஓ.. ஓ ஓ.. ஓ.ஓ.ஓ....

ஜுலி ஐ லவ் யூ

ஆ..ஹா..

ஜுலி ஐ லவ் யூ

ஆ..ஹா..

ப பம் ப பம் ப பம் ப பம் ஜுலி ஐ லவ் யூ


மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்

மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்

மனவீணை என நாதமீட்டி
கீதமாகி நீந்துகின்ற தலைவா
இதழோடையிலே வார்த்தையென்னும்
பூக்களாகி மிதக்கின்ற பாட்டா

மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்
ஓ.. ஓ.. ஓஓ..

ஜுலி ஐ லவ் யூ

ஆ..ஹா..

ஜுலி ஐ லவ் யூ

ஆ..ஹா..பரரபப்பா..தா..தா..தா..
தரர தா..தா...

நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே

உன் நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே

ஒரு மாலையிலே மஞ்சள் வெயில் போல நின்று 
நெஞ்சமதில் நீ வீச
மனச் சோலையிலே வட்டமிடும் வாசமென
உள்ளமதில் நீ பொங்க

விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்
ஓ..ஓ.. ஓ ஓ.. ஓ.ஓ.ஓ....


ஜுலி ஐ லவ் யூ ஜுலி ஐ லவ் யூ

ஆ...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.