கம்பி மத்தாப்பு கண்ணு பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Sevarkodi (2012) (சேவற்கொடி)
Music
Sathya
Year
2012
Singers
Karthikeyan
Lyrics
Vairamuthu
கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு
வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு

கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு
வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு

தூரத்தில பார்த்தா காதல் வாராது
பக்கத்துல பார்த்தா காமம் வாராது
மானும் இல்ல மயிலும் இல்ல
தூணும் இல்ல குயிலும் இல்ல
இருந்தும் மனது விழுந்து போச்சுது

அவ மூக்கு மேல வேர்வையாகனும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகனும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகனும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகனும்

குருவின் இன்பமிங்கே

அழுக்கு துணிய உடுத்தி
அவ தலுக்கி நடக்கும் போது
சுழுக்கு பிடிச்ச மனசு
அட சொக்குது சொக்குதடா

சுத்தமான தெருவில்
அவ துப்பி செல்லும் போதும்
எச்சில் விழுந்த இடத்தில்
மனம் நிக்குது நிக்குதடா

தூங்கி எழுந்த பிள்ளை அழகு
அவள் சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு
அவள் சொல்லுக்கடங்கா முடியும்
சூடிக் கசங்கிய மலரும்
என்னை இழுக்கும் கண்ண மயக்கும்
ரெண்டு பல்லு கண்டு பித்து பிடிக்கும்

மூக்கு மேல வேர்வையாகனும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகனும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகனும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகனும்

விளக்குமாரு பிடிச்சி
அவ வீதி பெருக்கும் போது
வளைவு நெளிவு பாத்து
மனம் வழுக்க பாக்குதடா

குளிச்சி முடிச்சி வெளியில்
அவ கூந்தல் துவட்டும் போது
தெறிச்சு விழுந்த துளியில்
நெஞ்சு தெறிச்சு போகுதடா

அவ வளைவி ஒலிக்கும் வாசல் அழகு
அவ கொலுசு ஒலிக்கும் வீதி அழகு
ஒரு விக்கல் எடுக்கிற போதும்
தும்மி முடிக்கிற போதும்
அவஸ்தையிலும் அவள் அழகு
குத்தம் குறையிலும் மொத்த அழகு

மூக்கு மேல வேர்வையாகனும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகனும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகனும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகனும் 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.