Song lyrics

Kombendhi Lyrics

கொம்பேந்தி பாடல் வரிகள்

Last updated Nov 15, 2026

Music
Sushin Shyam
Year
2026
Singers
Kaber Vasuki
Lyricist
Kaber Vasuki
Kombendhi

Lyrics

Kombendhi Lyrics

ஓர் பார்வையிலே பல புதிர் அவிழ்ந்தே
ஓர் சாட்சியிலே பல சதி சிதறுதே
கூர் காட்சியிலோ குவியமே குழைந்தே
வண்ணம் தினமுமும் கரையுதே

பார்க்காத கேஸா
செய்யாத மாஸா
ஃபேட் உந்தி லேசா
ஆட்டிவைக்கும் ராசா

காணாத கோணமெல்லாம் காலக்கோலம் போடும்
வீழாம நெஞ்சம் ஊஞ்சல் ஆட்டத்தில் போராடும்
கொம்பேந்திடும்!

அந்நாளில் கல்லை கூராக்கிக் கொண்டான்
கூரான கல்லை கோலாக்கிக் கொண்டான்
அம்பாக்கி எய்து உளியாக்கி செதுக்கி
கோ வாகை சூடி செய்தானே ஜாலி

இருளாகும்போது இடித்தாங்கும் வீரம்
சாபங்கள் வெல்ல கோள்கள் மாற்றி கொள்ளும்
எப்போதும் சூழலேற்ப சூழ்ச்சி கைகள் ஏந்தும்
நிலைக்காத காலம் மேலே போர் தொடுக்கச் செல்லும்

புண்ணாகிடும்... புலனாகிடும்... கொம்பேந்திடும்!

மேகம் மண்ணில் விழட்டும்
பாறை விண்ணை பிளந்தும்
கொம்பேந்தி வேட்டை தொடரும்!

நெஞ்சம் அஞ்சும் பொழுதும்
ஆற்றல் மிஞ்சும் நொடியும்
கொம்பேந்தி வேட்டை தொடரும்!

ஆழி பொங்கி எழும்பும்
கொம்பேந்தி வேட்டை தொடரும்
தேகம் கெஞ்சி அழுகும்
கொம்பேந்தி வேட்டை தொடரும்
ஆழி பொங்கி எழும்பும்
கொம்பேந்தி வேட்டை தொடரும்
தேகம் கெஞ்சி அழுகும்
கொம்பேந்தி வேட்டை தொடரும்!
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people