அன்பே நீ என்ன பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Paandiyan (1992) (பாண்டியன்)
Music
Ilaiyaraaja
Year
1992
Singers
K. S. Chithra, Mano, Panchu Arunachalam
Lyrics
Panchu Arunachalam
பெண் : அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ
அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ
கண்கள் கவர்ந்து நிற்கும் வின் ஆளும் இந்திரனோ
பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ
சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பாண்டியனோ

அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ

***

பெண் : வஞ்சிப் பெண் ஆசைக் கொள்ளும் கட்டழகா
வைகை நீராட வந்த கள்ளழகா
தேக்காலே சிற்பி செய்த தோலழகா
தோகைக்கு மோகம் தந்த ஆளழகா
நீங்காமல் இருப்பேன் நீ தான் அணைத்தால்
நாணாமல் கொடுப்பேன் தேன் தான் எடுத்தால்
ஆசை பெருகுதையா இடையினில்
ஆடை நழுவுதையா
மேனி உருகுதையா மனதினில்
மோகம் வளருதையா

அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ
கண்கள் கவர்ந்து நிற்கும் வின் ஆளும் இந்திரனோ
பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ
சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பாண்டியனோ
அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ

***

பெண் : அம்மாடி போட்டதென்ன சொக்குப் போடி
என்னாகும் பாவம் இந்த சின்னக் கொடி
பொன்னான கையை கொஞ்சம் தொட்டுப் பிடி
சிங்கார ராகம் வைத்து மெட்டுப் படி
தாளாத மயக்கம் தோன்றும் எனக்கு
நான் கொண்ட எதையும் தந்தேன் உனக்கு
பாவை உதடுகளில் உனக்கென பாலும் வடிகிறது
காதல் நினைவுகளில் குளிர் தரும்
காற்றும் சுடுகிறது

ஆண் : அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ
மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ
கண்கள் கவர்ந்து நிற்கும் கண்ணான கண்மணியோ
காளை மனம் மயங்கும் பொன்னான பெண்மணியோ
சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பைங்கிளியோ

அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ
மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ
அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ
மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.