ஒரு காதல் என்பது பாடல் வரிகள்

Movie Name
Chinna Thambi Periya Thambi (1987) (சின்ன தம்பி பெரிய தம்பி)
Music
Gangai Amaran
Year
1987
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics
Vairamuthu
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு
காதல் கீதம் நீ பாடு

ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி


கன்னிப் பூவும் உன்னை பின்னிக் கொள்ள வேண்டும்
முத்தம் போடும் போது எண்ணிக் கொள்ள வேண்டும்

முத்தங்கள் சங்கீதம் பாடாதோ
உன் கூந்தல் பாயின்று போடாதோ

கண்ணா கண்ணா உன்பாடு
என்னைத் தந்தேன் வேறோடு
உன் தேகம் என் மீது...

ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி


உன்னைப் போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை
உன்னையன்றி யாரும் பெண்ணாய் தோன்றவில்லை

பூவொன்று தள்ளாடும் தேனோடு
மஞ்சத்தில் எப்போது மாநாடு

பூவின் உள்ளே தேரோட்டம்
நாளை தானே வெள்ளோட்டம்

என்னோடு பண்பாடு

ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு
காதல் கீதம் நீ பாடு

ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.