தேவுடா தேவுடா பாடல் வரிகள்

Last Updated: Mar 31, 2023

Movie Name
Chandramukhi (2005) (சந்திரமுகி)
Music
Vidyasagar
Year
2005
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Pa. Vijay
ஹாரே ஹாரே ஹாரே ஹாரே 
தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா
சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா
ஹேய் தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா
சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா
எங்காளு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள்
நீ கொஞ்சம் பட்டை தீட்டடா

ரீபிட்டே

எங்காளு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள்
நீ கொஞ்சம் பட்டை தீட்டடா

சக்தியெல்லாம் ஒண்ணு சேர்ந்தாலே ஓஓ

ஓஓஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ

சொர்க்கம் வரும் இந்த மண் மேலே ஓஓ

ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ

தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா
சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா

ஹாரே ஹாரே ஹாரே ஹாரே
ஹரரே ஹாரே ஹரரே ஹாரே
எண்ணிப்பாரு கொஞ்சம் ஏர் பிடிக்கும் ஆள
சோத்தில் நாம கையை வைக்க
சேத்தில் வைப்பான் கால

ஹேய்.. ஹேய்.. ஹேய்.. ஹேய்

சாக்கடைக்குள் போயி சுத்தம் செய்யும் பேரு
நாலு நாளு லீவு போட்டா நாறிப்போகும் ஊரு
முடி வெட்டும் தொழில் செய்யும்
தோழந்தான் இல்லையேல்
நமக்கெல்லாம் ஏது அழகு
நதி நீரில் நின்று துணி
துவைப்பவன் இல்லையேல்
வெளுக்குமா உடை அழுக்கு
எந்த தொழில் செய்தாலென்ன
செய்யும் தொழில் தெய்வமென்று
பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே

ரீப்பிட்டே

சக்தியெல்லாம் ஒண்ணு சேர்ந்தாலே ஓஓ

ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ

சொர்க்கம் வரும் இந்த மண் மேலே ஓஓ

ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ

ஆ..தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா
சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா 

உன்னைப்பற்றி யாரு அடஎன்ன சொன்னால் என்ன
இந்த காதில் வாங்கி அதை அந்த காதில் தள்ளு 
மேகம் மிதந்தாலும் காகம் பறந்தாலும்
ஆகாயம் தான் அழுக்காக ஆகாதுன்னு சொல்லு
பூப்பந்தை யாரும் நீரில் பொத்தித்தான் வெச்சாலும்
பந்து வரும் தண்ணி மேலத்தான்
அட உன்னை யாரும் ஓரம் கட்டித்தான் வெச்சாலும்
தம்பி வாடா வந்து தொடத்தான்
மூணாம் பிறை மெல்ல மெல்ல வெண்ணிலவாய்
மின்னுவதை மின்மினிகள் தடுத்திடுமா

ரீப்பிட்டே

சக்தியெல்லாம் ஒண்ணு சேர்ந்தாலே ஓஓ

ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ

சொர்க்கம் வரும் இந்த மண் மேலே ஓஓ

ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ

தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா

ஹாரே ஹாரே ஹாரே
ஹாரே ஹாரே ஹாரே
ஹாரே ஹாரே ஹாரே
சாமி!

சூடூடா சுடூடா எங்க பக்கம் சூடூடா

ஹாரே ஹாரே ஹாரே
ஹாரே ஹாரே ஹாரே
ஹாரே ஹாரே ஹாரே

எங்காளு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள்
நீ கொஞ்சம் பட்டை தீட்டடா- ரீபிட்டே

எங்காளு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள்
நீ கொஞ்சம் பட்டை தீட்டடா

சபாஷே! சக்தியெல்லாம் ஒண்ணு சேர்ந்தாலே ஓஓ

ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ

சொர்க்கம் வரும் இந்த மண் மேலே ஓ

ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.