ஆடாத ஆட்டமெல்லாம் பாடல் வரிகள்

Movie Name
Mounam Pesiyadhe (2002) (மெளனம் பேசியதே)
Music
Yuvan Shankar Raja
Year
2002
Singers
Karthik
Lyrics
Snehan
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா..?
நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன
உண்மை என்ன உனக்கு புரியுமா..?
வாழ்கை இங்க யாருக்கும் சொந்தம் இல்லையே
வந்தவனும் வருபவனும் நிலைபதிள்ளயே
ஏ நீயும் நானும் நூறு வருஷம்
இருபதில்ல பாரு..ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா..?
நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன
உண்மை என்ன உனக்கு புரியுமா..?நித்தம் கோடி சுகங்கள் தேடி கண்கள் மூடி அலைகின்றோம்
பாவங்களை மேலும் மேலும் சேர்த்து கொண்டே போகின்றோம்
மனிதன் என்னும் வேடம் போட்டு மிருகமாக வாழ்கின்றோம்
தீர்ப்பு ஒன்று இருப்பதாய் மறந்து தீமைகளை செய்கின்றோம்
காலம் மீண்டும் திரும்பாதே ...பாதை மாறி போகாதே...
பூமி கொஞ்சம் குளுங்கினாலே நின்று போகும் ஆட்டமேஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா..?
நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன
உண்மை என்ன உனக்கு புரியுமா..?ஹே...கருவறைக்குள் தானாக கற்று கொண்ட சிறு ஆட்டம்
தொட்டிலுக்குள் சுகமாக தொடரும் ஆட்டமே,
பருவம் பூக்கும் நேரத்தில் காதல் செய்ய போராட்டம்
காதல் வந்த பின்னாலே போதை ஆட்டமே
பேருக்காக ஒரு ஆட்டம் காசுக்காக பல ஆட்டம்
எட்டு காலில் போகும் போது ஊரு போடும் ஆட்டமேஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா..?
நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன
உண்மை என்ன உனக்கு புரியுமா..?
வாழ்கை இங்க யாருக்கும் சொந்தம் இல்லையே
வந்தவனும் வருபவனும் நிலைபதிள்ளயே
ஏ நீயும் நானும் நூறு வருஷம்
இருபதில்ல பாரு..ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா..?

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.