எலோமியா எலோமியா பாடல் வரிகள்

Movie Name
Valiyavan (2015) (வலியவன்)
Music
D. Imman
Year
2015
Singers
Sunidhi Chauhan
Lyrics
Na. Muthukumar
எலோமியா எலோமியா
கண்ணோரமாய் காதல் மெய்யா
கோடி பனி மழை மீது எரிமலை
காதலா

எலோமியா எலோமியா
நெஞ்சோரமாய் நீயா நீயா
நீரில் வந்து இன்று
தீயை தந்ததென்ன
மாயமா
எந்நாளும் பெண் நெஞ்சம் எதை கேட்கும்
உன் தொழில் தான் காவல்
எதிர் பார்க்கும்
வீரத்தில் வென்றாயடா
வீழ்ந்ததே இவள் மனம் இதோ இதோ

எலோமியா எலோமியா
கண்ணோரமாய் காதல் மெய்யா
கோடி பனி மலை மீது எரிமலை
காதலா

நான் சொல்வதை
நீ கேட்கிறாய்
எந்நாளும் இது போதுமே

உன் காதலால் தள்ளி சென்று
தனியாக அழ தோன்றுதே

நின்றாலும் நடந்தாலும்
தூக்கத்தில் கிடந்தாலும்
உன் காதல் பந்தாடுதே

நீரானது தீயானதே
தீயானது நீரானதே
எல்லாமே வேறானதே

எலோமியா எலோமியா
கண்ணோரமாய் காதல் மெய்யா
கோடி பனி மலை மீது எரிமலை
காதலா

அன்றாடம் என் அதிகாலைகள்
உன் மார்பில் விடியட்டுமே

அன்பே எந்தன் பொன் மாலைகள்
உன்னோடு முடியட்டுமே

தீ போல ஆண் பிள்ளை
பூ போல பெண் பிள்ளை
நாம் காதல் பெற வேண்டுமே

மழலை சத்தம்
தரவேண்டுமே
ஆனாலும் என் மூத்த பிள்ளை
நீ தானே எந்நாளுமே

எலோமியா எலோமியா
கண்ணோரமாய் காதல் மேய
கோடி பனி மலை மீது எரிமலை
காதலா

எந்நாளும் பெண் நெஞ்சம் எதை கேட்கும்
உன் தொழில் தான் காவல்
எதிர் பார்க்கும்

வீரத்தில் வென்றாயடா
வீழ்ந்ததே இவள் மனம் இதோ இதோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.