ஆத்தா உன் சேல பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
Kutti Puli (2013) (குட்டிப்புலி)
Music
M. Ghibran
Year
2013
Singers
Sundar Narayana Rao
Lyrics
Vairamuthu
ஆத்தா உன் சேல அந்த ஆகாயத்த போல...
தொட்டில் கட்டி தூங்க தூளி கட்டி ஆட..
ஆத்துல மீன் பிடிக்க அப்பனுக்கு தலை தொவட்ட
பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்.. நான்
செத்தாலும் என்ன போத்த வேணும்..ஒய்
செத்தாலும் யென்ன போத்த வேணும்

ஆத்தா உன் சேல அந்த ஆகாயத்த போல...
ஆத்தா உன் சேல...

ஆ.. இடுப்புல கட்டிக்கிட்டு நீச்சல் பழகினதும்
உன் சேலை தானே வண்ண பூஞ்சோலை தானே...
வெறும் தரை விரிப்புல நான் படுத்து கிடந்ததுவும்
உன் சேலை தானே வண்ண பூஞ்சோலை தானே...

நான் இடுப்புல கட்டிக்கிட்டு நீச்சல் பழகினதும்
உன் சேலை தானே வண்ண பூஞ்சோலை தானே...
வெறும் தரை விரிப்புல நான் படுத்து கிடந்ததுவும்
உன் சேலை தானே வண்ண பூஞ்சோலை தானே...
ஈர சேலை காயும்போது வானவில்லா தெரியும்
இத்து போன சேலையில் உன் சோக கதை புரியும்
கஞ்சி கொண்டு போகையிலே சும்மாடா இருக்கும்
நீ சோலை கட்டி இரைச்ச தண்ணி சக்கரையா இனிக்கும்
சேலை கட்டி இரைச்ச தண்ணி சக்கரையா இனிக்கும்..

ஆத்தா உன் சேல அந்த ஆகாயத்த போல...
ஆத்தா உன் சேல...

அக்கா கட்டி பழகினதும் ஆடு கட்டி மேய்ச்சதுவும்
உன் சேலை தானே வண்ண பூஞ்சோலை தானே...
வெக்கையில விசிறியாகும் வெயிலுக்குள்ள கொடையாகும்
உன் சேலை தானே வண்ண பூஞ்சோலை தானே...

அக்கா கட்டி பழகினதும் ஆடு கட்டி மேய்ச்சதுவும்
உன் சேலை தானே வண்ண பூஞ்சோலை தானே...
வெக்கையில விசிறியாகும் வெயிலுக்குள்ள குடையாகும்
உன் சேலை தானே வண்ண பூஞ்சோலை தானே...
பொட்டிக்குள்ள மடிச்சி வைச்ச அழகு முத்து மாலை..
காயம் பட்டு வெரல்களுக்கு கட்டு போடும் சேலை
மயிலிரகா உன் சேலை மனசுக்குள்ள விரியும்
வெலுத்த சேலை திரி..வௌக்கு போட்டா எரியும்..

வெலுத்த சேலை திரி வௌக்கு போட்டா எரியும்..

ஆத்தா உன் சேல அந்த ஆகாயத்த போல...
தொட்டில் கட்டி தூங்க தூளி கட்டி ஆட..
ஆத்துல மீன் பிடிக்க அப்பனுக்கு தல தொவட்ட
பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்.. நான்
செத்தாலும் என்ன போத்த வேணும்.ஒய்
செத்தாலும் யென்ன போத்த வேணும்...

செத்தாலும் யென்ன போத்த வேணும்...
செத்தாலும் யென்ன போத்த வேணும்...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.