நானாகிய நதி மூலமே பாடல் வரிகள்

Movie Name
Vishwaroopam 2 (2018) (விஸ்வரூபம் 2)
Music
M. Ghibran
Year
2018
Singers
Kamal Haasan
Lyrics
Kamal Haasan
நானாகிய நதி மூலமே 
தாயாகிய ஆதாரமே 
என்னை தாங்கிய கருங்குடம்
இணையேயில்லா
திருத்தலம்
அனுதினம் உன்னை நினைந்திருக்கிறேன் 
அனுதினம் உன்னை நினைந்திருக்கிறேன்

உன் போல நான் உயிரானதும் 
பெண் என்ற நான் தாயானதும்
பிறந்த பயனாய் உன்னை பெறும் 
சிறந்த பெருமை நிகழ்ந்ததும்
அனுதினம் உன்னை நினைந்திருக்கிறேன் 
அனுதினம் உன்னை நினைந்திருக்கிறேன்

அம்மாவும் நீ அப்பாவும் நீ
அன்பால் என்னை ஆண்டாளும் நீ
பிறந்த பயனாய் உன்னை பெறும் 
சிறந்த பெருமை நிகழ்ந்ததும்
அனுதினமும் நான் நினைந்திருக்கிறேன்

உன் மனதின் சாயலுள்ள
பெண் உருவைத் தேடினேன்
பழங்கனவைக் காணலயே
கண்கலங்க காண்கிறேன்
பழையபடி நினைவுகள் திரும்பிடும்
பிறந்தமடி சாய்ந்திடக் கிடைத்திடும்
நாள் வருமோ
திருநாள் வருமோ

நானாகிய நதி மூலமே 
தாயாகிய ஆதாரமே 
என்னை தாங்கிய கருங்குடம்
இணையேயில்லா
திருத்தலம்
அனுதினம் உன்னை நினைந்திருக்கிறேன் 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.