காட்டு வழி பாடல் வரிகள்

Movie Name
Adhu Oru Kana Kaalam (2005) (அது ஒரு கானாக்காலம்)
Music
Ilaiyaraaja
Year
2005
Singers
Ilaiyaraaja
Lyrics
Ilaiyaraaja
காட்டு வழி
கால் நடையா போற
தம்பி காட்டு வழி கால்
நடையா போற தம்பி
பொழுதாகும் முன்னே
போற இடம் சேர்ந்துவிடு

காலையிலே இள
வெயிலு கடுமை இல்ல
உன் கால் அடியில் கருத்து
வெச்சா கவலை இல்ல

போகும் வழி மேல
புது புதுசா பாடம் வரும்
கவனம் இருந்தாலே
எதிர்காலம் கை கூடும்
மனசொன்னுதான் மனுஷனுக்கு
துணை இருக்கும்

காட்டு வழி கால்
நடையா போற தம்பி
பொழுதாகும் முன்னே
போற இடம் சேர்ந்துவிடு

வத்தாத ஜீவ
நதி வாழ்க்கை அட
நம்பிக்கை தான் இரு
பக்கமும் கரைகளடா
நிக்காம ஓடட்டுமே
ஓடவிடு வழி அடச்சா
தேங்கிவிடும் திறந்து
விடு

நதி போல்
வேகத்திலே அந்த நாளும்
ஓடுதடா ஒரு நிமிடம்
போனாலும் திரும்பாது
தெரிஞ்சுக்கடா இந்த
இளவயசில் முழுச்சிகிட்டா
வழி இருக்கு

கனவினிலே
ஒருத்தி அங்கே வந்தாளா
நல்ல கனிவோடு ஒரு பேச்சு
சொன்னாளா காலம் எல்லாம்
துணை இருப்பேன் என்றாளா
அட கண் முழிச்சா கை விலகி
போனாளா

நினைவும் கனவாக
இங்க நிஜமா நடந்திடுமா
தெனமும் அந்த நினைப்பில்
உன் வாழ்வும் தொடர்ந்திடுமா
வாழ்க்கை கனவில்ல
நினைவில்லை உண்மையடா

காட்டு வழி கால்
நடையா போற தம்பி
பொழுதாகும் முன்னே
போற இடம் சேர்ந்துவிடு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.