தூறல் நின்றாலும் பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Chikku Bukku (2010) (சிக்கு புக்கு)
Music
Pravin Mani
Year
2010
Singers
Anuradha Sriram, Hariharan
Lyrics
Vaali
உன்னை உன்னிடம் தந்து விட்டேன்
நீ என்னை என்னிடம் தந்து விடு
போதும் போதும்
எனை போக விடு

கண்மணி
எனை போக விடு
கண்மணி
கண்மணி
தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்
ஈரம் மண்ணிலே
தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும்
எண்ணம் உன்னிலே
இரவில் தூங்காத இமைகள் ஓரம்
நீயே நிற்கிறாய்
எனது தூக்கத்தை நீதான் வாங்கி
எங்கே விற்கிறாய்
தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்
ஈரம் மண்ணிலே
தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும்
எண்ணம் உன்னிலே
உயிரே உயிரே
உன்னை கேட்காமல் என்னை கேட்காமல்
காதல் உண்டானதே
எனை போக விடு
கண்மணி
விழிகள் என்கின்ற வாசல் வழியாக
காதல் உள்சென்றதே
இனியும் உன் பேரை என் நெஞ்சோடு
ஒட்டி வைப்பதா
எனது பொருள் அல்ல நீதான் என்று
எட்டி வைப்பதா
விடைகள் இல்ல வினாக்கள் தானடி
தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்
ஈரம் மண்ணிலே
தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும்
எண்ணம் உன்னிலே
இரவில் தூங்காத இமைகள் ஓரம்
நீயே நிற்கிறாய்
எனது தூக்கத்தை நீதான் வாங்கி
எங்கே விற்கிறாய்

தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்
ஈரம் மண்ணிலே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.