அதிரூபனே அதிகாரனே பாடல் வரிகள்

Movie Name
Saamy 2 (2018) (சாமி 2)
Music
Devi Sri Prasad
Year
2018
Singers
M. M. Manasi
Lyrics
Viveka
அதிரூபனே
அதிகாரனே அதிரூபனே
அதிரூபனே அதிகாரனே
அதிகாரனே

சூறை காற்றென
வந்தாய் என் சுதந்திரம்
மீண்டும் தந்தாய்
மாமலையாகி நின்றாய்
மத யானை போலே
வென்றாய்

அதிரூபனே
அதிரூபனே அதிகாரனே
அதிகாரனே

உன் பத்து விரலும்
ஆயுதம் ஊஊ… உன்னை
பார்க்கும் போதே பயம்
வரும் ஊஊ…

நீதான் ஆணின்
இலக்கணம் நீ துணையாய்
நின்றால் வருமே
தலைகணம்

அதிரூபனே
அதிகாரனே அதிரூபனே
அதிரூபனே அதிரூபனே
அதிகாரனே அதிகாரனே
அதிகாரனே

மழையாய் நீ
வந்தாய் நான் குடையோடு
நின்றேன் பனியாக நின்றாய்
நான் வெயிலாகி வந்தேன்

உரையாட முன்பு
மொழி ஏதும் இல்லை என்
நிழல் கூட இன்று கேட்கும்
உன் சொல்லை

என் காற்றில்
ஏதோ கலந்தது ஊஊ…
என் கண்ணில் ஏதோ
நுழைந்தது ஊஊ…

உன்னால்
நானும் குழம்பினேன்
இந்த குழப்பம் தீர
கூடாதென்றும்
விரும்பினேன்

அதிரூபனே
அதிகாரனே அதிரூபனே
அதிரூபனே அதிகாரனே
அதிகாரனே

மனதோடு
ஏதோ மெலிதான
மாற்றம் திசை
மாறும் நெஞ்சில்
உன் தெளிவான
தோற்றம்

சிறுமூளை கூட
செயலின்றி வாட
தடுமாறி போனேன்
நான் தலை கீழாய்
ஆனேன் ……..

நீ தூரம் நின்றால்
மெல்லினம் உன்னை
தொட்டு பார்த்தால்
வல்லினம்

நீதான் துணிவின்
ரகசியம் என் வாழ்வில்
உன்னை கண்டது
தானே அதிசயம்

அதிரூபனே
அதிகாரனே அதிரூபனே
அதிரூபனே அதிரூபனே
அதிகாரனே அதிகாரனே
அதிகாரனே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.