தனிமையிலே பாடல் வரிகள்

Last Updated: Mar 21, 2023

Movie Name
Ivan Veramathiri (2013) (இவன் வேறமாதிரி)
Music
C. Sathya
Year
2013
Singers
Anand Aravindakshan, Nivas
Lyrics
Viveka
தனிமையிலே என் இதயம் துடிக்குதே
தொலைவினிலே என் நிழலும் நடக்குதே
என் அருகே நீ இருந்தால்
இரவு பகல் தேவையில்லை

தனிமையிலே என் இதயம் துடிக்குதே
தொலைவினிலே என் நிழலும் நடக்குதே

ஓ வான் நிலவு ஏளனமாய்
எனைப் பார்த்து சிரிக்கிறதே
ஊதுபத்தி போல் எனது
உயரம் இங்கே குறைகிறதே
ஆறுகளாய் விழி கலங்கும்
ஆறுதலாய் நீ இல்லையே
வேறெதுவும் புரியாமல்
வேர் வரையில் உன் கனவே
என்னவளே என் உலகம் உரையுதே
கண்களிலே என் கனவாய் நிறையுதே

பேச்சிருந்தும் மூச்சிருந்தும்
உயிரை மட்டும் காணவில்லை
நீ நடந்த சாலைகளில்
நடந்திடவே முடியவில்லை
ஏழு கடல் ஏழு மலை
தாண்டி உனைத் தேடிடுவேன்
காற்றில் எல்லாம் உன் பெயரை
எழுதி வைத்தே காத்திருப்பேன்
என்னுயிரே என் இதயம் துடிக்குதே
உயிர் விடுவேன் நீ பிறந்தால் நொடியிலே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.