கண்ணான கண்ணனுக்கு பாடல் வரிகள்

Last Updated: Feb 02, 2023

Movie Name
Aalayamani (1962) (ஆலயமணி)
Music
Viswanathan Ramamoorthy
Year
1962
Singers
P. Susheela, Seerkazhi Govindarajan
Lyrics
Kannadasan
வானம்பாடி...
ஆஹாஹஹா...

கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா அது பேசாமல்
பேசுவது கேட்கலையா

கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா அது பேசாமல்
பேசுவது கேட்கலையா

பொன்னான கண்மணிக்குப் புரியாதா கொஞ்சம் முன்னாலே
வந்தாலே தெரியாதா
வந்தாலே தெரியாதா
கண்ணழகை நான் காணக் கூடாதா கல்யாணத்
தேரோடக் கூடாதா 

பொன்னான கண்மணிக்குப் புரியாதா கொஞ்சம் முன்னாலே
வந்தாலே தெரியாதா
வந்தாலே தெரியாதா
கண்ணழகை நான் காணக் கூடாதா கல்யாணத்
தேரோடக் கூடாதா 

உள்ளத்தில் வீடுகட்டி உள்ளே ஓர் தொட்டில்கட்டி
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
ஆரிராராரொஅ ஆரிராராரொஅ ஆரிராராரொஅ
ஆரிராராரொஅ

உள்ளத்தில் வீடுகட்டி உள்ளே ஓர் தொட்டில்கட்டி
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
ஆரிராராரொஅ ஆரிராராரொஅ ஆரிராராரொஅ
ஆரிராராரொஅ

கன்னத்தில் முத்தமிட்டு கண்ணிரண்டில் கண்ணை வைத்து
சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா
சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா

கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா அது பேசாமல்
பேசுவது கேட்கலையா

மஞ்சத்தில் உன்னை வைத்து மல்லிகை முல்லை வைத்து
கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா
கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா
அந்தமலர் வாடுமென்று சொந்தமலர் வண்ணம் கண்டு
இந்தமலர் வேண்டுமென்று நான் பாடவா
இந்தமலர் வேண்டுமென்று நான் பாடவா

கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா அது பேசாமல்
பேசுவது கேட்கலையா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.