கண்ணோடு காண்பதெல்லாம் பாடல் வரிகள்

Movie Name
Jeans (1998) (ஜீன்ஸ்)
Music
A. R. Rahman
Year
1998
Singers
Nithyasree Mahadevan
Lyrics
Vairamuthu
ப பனி பனிபம பனிபம கமப சகசனி பனிபம கமகச கமப
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் (2)

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ
என்னைவிட்டு பிரிவதில்லை

தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் (2)

சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ
தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
இரவும் பகலும் வந்தாலும் நாள் என்பது ஒன்றல்லோ
கால்கள் இரண்டு கொண்டாலும் பயணம் என்பது ஒன்றல்லோ
இதயம் இரண்டு என்றாலும் காதல் என்பது ஒன்றல்லோ
(கண்ணோடு)

தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் (2)
அன்றில் பறவை இரட்டைப் பிறவி ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
பிரியாதே விட்டுப் பிரியாதே
கண்ணும் கண்ணும் இரட்டைப் பிறவி ஒரு விழி அழுதால் இருவிழி அருவி
பொழியாதோ அன்பே வழியாதோ
தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
ஒருவர் தூங்கும் தூக்கத்தில் இருவர் கனவுகள் காணுகிறோம்
ஒருவர் வாங்கும் சுவாசத்தில் இருவர் இருதயம் வாழுகிறோம்
தாவிக்கொள்ள மட்டும்தான் தனித் தனியே தேடுகின்றோம்

(கண்ணோடு)

(சுவரங்கள்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.