கொஞ்சம் நிலவு பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Thiruda Thiruda (1993) (திருடா திருடா)
Music
A. R. Rahman
Year
1993
Singers
Anupama Kumar, Suresh Peters
Lyrics
Vairamuthu
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
ஒன்றாக சேர்ந்தால் எந்தன் தேகம்

கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்
ஒன்றாக சேர்ந்தால் எந்தன் கண்கள்

கொஞ்சம் மிருகம் கொஞ்சம் கடவுள்
ஒன்றை சேர்ந்தால் எந்தன் நெஞ்சம்

சந்திரலேகா சந்திரலேகா

என் கனவில் எவனோ ஒருவன்
என் இரவில் ஒளியாய் தெரிவான்

வான் மழை போல் உயிரில் விழுவான்
தினம் நான் விரும்பும் வரையில் பொழிவான்

தேன் இதழை இவள் தந்து மாயாது
இனி பார்க் கடலில் அலை என்றும் ஓயாது

வந்து நான் மண்ணிலே ....

ஏன் பிறந்தேன் என்ற கேள்வி வாராது
இங்கு நீ இருந்தால் ஒரு தோல்வி நேராது

மங்கை உன் கால் பட்டால்
மண்ணும் ஒரு மண்ணல்ல

வெள்ளைப் பொன் தேகத்தில்
வேர்வைத் துளி உப்பல்ல

செந்தாழம் பூவுக்கு முள்ளொன்றும் குறை அல்ல
உள்ளொன்று வைத் தாலும்
உன் மீது பிழை அல்ல

பெண்ணே உன் கண்ணாளன்
பிறை ஏறி வருவானே

விண் கொண்ட மீன் எல்லாம்
விளையாட தருவானே

கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
ஒன்றாக சேர்ந்தால் எந்தன் தேகம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.