தீராத விளையாட்டு பிள்ளை பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Theeratha Vilaiyattu Pillai (2010) (தீராத விளையாட்டு பிள்ளை)
Music
Yuvan Shankar Raja
Year
2010
Singers
Andrea Jeremiah, Ranjith, Tanvi Shah
Lyrics
Vaali
தீராத
விளையாட்டு பிள்ளை
தோள் சேர நாள் தோறும்
வெவ்வேறு கிள்ளை

ஓயாமல்
கொடுப்பாயே தொல்லை
உன்போல அம்மம்மா
பிலேபாயே இல்லை

ஒரு பார்வை
வீசி விழி வார்த்தை
பேசி தெருவோர
பூவையும் நேசிப்பவன்

இசைபாடும்
லவ் போ்ட் இடை என்னும்
கீ போர்டு இடைவெளி
இல்லாமல் வாசிப்பவன்

மைவைத்து
மைவைத்து மயிலை
கை வைத்து கை வைத்து
பிடிப்பான் கை வைத்து கை
வைத்து பிடித்து பொய்
வைக்கும் பொய் வைக்கும்
பொல்லாதவன்

ஒரு கன்னம்
சம்பக்னே ஒரு கன்னம்
கிரேப் ஒயின் என சொல்லி
பூமுத்தம் கேட்கின்றவன்

ஓ மன்மதா நீ
திண்பதா நானென்ன
ஒரு கோப்பை தேன்
என்பதா

பூ என்கிறாய்
பொன் என்கிறாய்
பொய்யான வசனங்கள்
ஏன் சொல்கிறாய்

ஆஆ ஆஆ வா
கண்ணா வா நாம் முன்னு
பின்னும் ஜன்னல் வைத்த
மாளிகை காற்றைப்போல
வா

காற்றை போல்
மாறுவேன் தீண்டாத
இடம் பார்த்து நான்
தீண்டுவேன்

மைவைத்து
மைவைத்து மயிலை
கை வைத்து கை வைத்து
பிடிப்பான் கை வைத்து கை
வைத்து பிடித்து பொய்
வைக்கும் பொய் வைக்கும்
பொல்லாதவன் ஓஹோ

ஏ ஹே வோஹா
வோஹா ஆஆ ஆஆ நீ
நட்டது வேர் விட்டதே நீ
இன்றி யார் இங்கு நீர்
விட்டதே

மாலையில்
நீ செங்கரும்பு வில்
எடுத்து ஆடுகிறாய்
காயம் உட்பக்கம்

காதலோ
போர்க்களம் காயங்கள்
ஆனாலும் நியாயங்களே

தீராத
விளையாட்டு பிள்ளை
தோள் சேர நாள் தோறும்
வெவ்வேறு கிள்ளை

ஓயாமல்
கொடுப்பாயே தொல்லை
உன்போல அம்மம்மா
பிலேபாயே இல்லை

ஒரு பார்வை
வீசி விழி வார்த்தை
பேசி தெருவோர
பூவையும் நேசிப்பவன்

ஓ இசைபாடும்
லவ் போ்ட் இடை என்னும்
கீ போர்டு இடைவெளி
இல்லாமல் வாசிப்பவன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.