ஒரே ஒரு ஊரில் பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Saivam (2014) (சைவம்)
Music
G. V. Prakash Kumar
Year
2014
Singers
Haricharan
Lyrics
Na. Muthukumar
ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு
உறவுகள் கூடும் கிளிக்கூடு
இந்த அன்பை போல வேறேது
வார்த்தைகள் எல்லாம் போதாது
எந்த ஊரில் வாழ்ந்திடும் போதும்
பறவை சொந்த கூட்டை மறந்திடுமா
எங்கு சென்று பூத்திடும் போதும்
மரங்கள் வேரை விட்டுக் கொடுத்திடுமா
வேறெங்கும் இல்லாத வேராரும் சொல்லாத
இதிகாசம் இந்த பாசம் தான்
ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு
உறவுகள் கூடும் கிளிக்கூடு
தானே நானே நானே தானே நானே நா
தானே நானே நானே தானே நானே நா

தேரோடும் வீதி அதில் மண் வாசம் வீசும்
தாழ்வாரம் எங்கும் தினம் தேவாரம் தான்
மூடாத வாசல் அது விருந்தோம்பல் பேசும்
எந்நாளும் இங்கே அட சந்தோசம் தான்
கண்ணீரை கண்கள் என்றும் பார்த்ததில்லை
ஏன் மண்மீது சொர்க்கம் இது தான்
அணில் ஆடும் முற்றத்தில் அன்பென்னும் ராகத்தில்
மயிலாக துள்ளி ஆடிப்பாடு
ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு
உறவுகள் கூடும் கிளிக்கூடு

பணம் காசு இல்லை பேரும் புகழ் கூட இல்லை
எது இந்த மண்ணில் அட இன்பம் தரும்
சொந்தங்கள் வந்து ஒரு சிரிப்பொன்று தந்தால்
அது போதும் என்றும் இந்த வாழ்வே வரம்
தந்தை சொல் வேதம் என்று போற்றும் பிள்ளைகள்
வருங்கால விழுதல்லவா
ஆகாயம் வீழ்ந்தாலும் பூலோகம் சாய்ந்தாலும்
அன்பொன்றே நம்மை தாங்கும் நாலும்
ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு
உறவுகள் கூடும் கிளிக்கூடு
தானே நானே நானே தானே நானே நா
தானே நானே நானே தானே நானே நா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.