வானம் பறந்து பாடல் வரிகள்

Movie Name
Pa. Paandi (2017) (ப. பாண்டி)
Music
Sean Roldan
Year
2017
Singers
Ananthu
Lyrics
Selvaraghavan
வானம் பறந்து
பார்க்க ஏங்கும் பூக்கள்
சிறகை நீட்டுதாம் ஓடும்
நதியினிலே ஓடம் ஓய்ந்து
கரையை தேடுதாம்

என்றும் இவனும்
குழந்தையா வார்த்தை
இன்னும் மழலையாய்
சிரிப்பில் இதயம்
பொங்குமே கருணை
சிந்துதே

காற்று மலையில்
மோதலாம் அந்த கடலில்
சேரலாம் இந்த குழந்தைக்
கூட்டத்தில் இவனும் தென்றலே

மன்னாதி மன்னா
வீராதி வீரா எங்கள் நண்பா
பாண்டி

விளையாடும்
சிங்கம் விலையில்லா
தங்கம் எங்கள் நண்பா
பவர் பாண்டி

புதிய வானம்
பறந்துப்பார்க்க ஏங்கும்
பூக்கள் சிறகை நீட்டுதாம்

வாழ்க்கையே
என்றுமே எதையோ
தேடும் பயணம்
இறுதியில் அடைக்கலம்
பேரன் பேத்தி ஜனனம்

தேடினோம்
ஓடினோம் எத்தனை
கனவு ஓய்ந்து போய்
சாய்வது குழந்தை
இருக்கும் கூடு

இதுதான் சுகமா
கடவுளின் வரமா
கண்களின் கண்ணீர்
தாலாட்டுமா

தாயும் இல்லை
தாரமும் இல்லை
மகனின் மகளே நீ ஓடிவா

தோளில் ஒன்று
மடியில் ஒன்று உணர்ந்தால்
மட்டும் புரியும் உயிர் மட்டும்
இது போதும்

வானம் பறந்து
பார்க்க ஏங்கும் பூக்கள்
சிறகை நீட்டுதாம் ஓடும்
நதியினிலே ஓடம் ஓய்ந்து
கரையை தேடுதாம்

என்றும் இவனும்
குழந்தையா வார்த்தை
இன்னும் மழலையாய்
சிரிப்பில் இதயம்
பொங்குமே கருணை
சிந்துதே

காற்று மலையில்
மோதலாம் அந்த கடலில்
சேரலாம் இந்த குழந்தைக்
கூட்டத்தில் இவனும் தென்றலே

மன்னாதி மன்னா
வீராதி வீரா எங்கள் நண்பா
பாண்டி

விளையாடும்
சிங்கம் விலையில்லா
தங்கம் எங்கள் நண்பா
பவர் பாண்டி

புதிய வானம்
பறந்துப்பார்க்க ஏங்கும்
பூக்கள் சிறகை நீட்டுதாம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.